Who is Sengunthar ?
Sengunthar, also known as the Kaikolar and Sengunthar Mudaliyar, is a Tamil caste commonly found in the Indian state of Tamil Nadu and also in some other parts of South India. They are traditionally weavers by occupation and warriors by ancient heritage. They are sub divided into numerous clans based on a patrilineal system called Koottam or Kulam, which is similar to gotras.
வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை, நெசவுக்கலை. பருத்தியிலிருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காத வண்ணம் ஆடை பாதுகாத்து வந்தது. நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது. ”ஆடையுடையான் அவைக் கஞ்சான்” ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்ற முதுமொழிகள் பல தோன்றின. முற்காலத்தில், மக்களின் ஆடை அதை அணியும் முறை ஆகியவற்றைக் கொண்டே அவர்களின் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.